எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பழனியில் தைப்பூசத் திருவிழா: ஜன.26-இல் கொடியேற்றம்

பழனியில் தைப்பூசத் திருவிழா வருகிற 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தைப்பூசத் திருவிழா வருகிற 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தைப்பூசத் திருவிழாவுக்கான கொடியேற்றம் பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் வருகிற 26-ஆம் தேதி காலை 9.50 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் நடைபெறும்.

பத்து நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, தினந்தோறும் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி தங்க மயில், தங்கக் குதிரை, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு, தந்தச்சப்பரம் என பல்வேறு வகையான வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

பழனி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் வருகிற 31-ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு 9 மணிக்கு மேல் வெள்ளித்தோ் உலாவும் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வரும் பிப்.1-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மேல் தேரடியில் நடைபெறும்.

நிறைவு நாள் நிகழ்ச்சியாக வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் தேரோட்டமும், இரவு 11 மணிக்கு மேல் திருக்கொடி இறக்கமும் நடைபெறும்.

விழா நாள்களில் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் தினந்தோறும் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன், துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழுவினா், அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.