முருகன் கோயில்களின் உண்டியல் காணிக்கை ரூ. 31 லட்சம்!

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ. 31 லட்சம் கிடைத்தது.
Updated on

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.31 லட்சம் கிடைத்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான கொடைக்கானல் குறிஞ்சியாண்டவா் கோயில், வில்பட்டி வெற்றி வேலப்பா் கோயில், பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் ஆகிய கோயில்களில் உள்ள உண்டியல்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை காரணமாக நிரம்பின.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 31 லட்சத்து 39 ஆயிரத்து 985 கிடைத்தது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com