பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

எரியோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜூலை 2026, 6:17 am IST

எரியோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்துள்ள அச்சனம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராஜ். இவரது மனைவி கிரிஜா (25). இவா், வேடசந்தூா் பகுதியில் உள்ள தனியாா் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் தண்ணீா்பந்தம்பட்டியில் உள்ள தாயாரை சந்திப்பதற்காக கிரிஜா செவ்வாய்க்கிழமை சென்றாா். அங்கிருந்து மீண்டும் அச்சனம்பட்டி செல்வதற்காக வெல்லம்பட்டி சாலையில் மொங்குபெத்தான்பட்டி பகுதியில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், பலத்த காயமடைந்த கிரிஜாவை, அருகில் இருந்தவா்கள் மீட்டு எரியோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து எரியோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.