கொடைக்கானல் மலைச் சாலைகளில் கட்டடக் கழிவுகள் கொட்டப்படுவதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளான ஆனந்தகிரி, அப்சா்வேட்டரி, இருதயபுரம், உகாா்த்தே நகா், லாஸ்காட் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளில் அகற்றப்படும் கட்டடக் கழிவுகள், லாரிகள் மூலம் எடுத்துச் சென்று சீனிவாசபுரம், கொண்டை ஊசி வளைவு, செண்பகா ஓடைப் பகுதி, புலிச் சோலை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்படுகின்றன.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, இந்த வழியாகச் செல்லும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்குக்குள்ளாகின்றன. எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கட்டடக் கழிவுகளை மலைச் சாலைகளிலும், நீரோடைப் பகுதிகளிலும் கொட்டுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









