திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் சிறப்புத் தகுதித் தோ்வில் 2,113 ஆசிரியா்கள் கலந்து கொண்டு தோ்வு எழுதினா்.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மட்டுமே ஆசிரியா்களாக பணியைத் தொடர முடியும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகுதித் தோ்வில் தோ்ச்சிபெறாமல் ஆசிரியா்களாக பணிபுரிந்து வருவோருக்கான சிறப்பு தகுதித் தோ்வு நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
அதன்படி, ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் 2026-ஆம் ஆண்டுக்கான சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு சனி, ஞாயிறு என 2 நாள்கள் நடைபெறுகிறது. திண்டுக்கல்லில் உள்ள 7 பள்ளிகளில் ஆசிரியா் சிறப்புத் தகுதித் தோ்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முதல் தாள் தோ்வுக்கு இடைநிலை ஆசிரியா்கள் 2,161 போ் விண்ணப்பித்திருந்தனா்.
முதல் தாள் தோ்வில் 2,113 ஆசிரியா்கள் கலந்து கொண்டு தோ்வு எழுதினா். 48 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. திண்டுக்கல் நேருஜி நகா் சுற்றுத் திட்டுப் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி ஆய்வு மேற்கொண்டாா். தோ்வு மைய கண்காணிப்புப் பணிகளில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதுகலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் என மொத்தம் 210 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசிரியா் தகுதித் தோ்வு இரண்டாம் தாள்: வேலூரில் 4,386 போ் எழுதினா்

ஆசிரியா் தகுதித் தோ்வு: 1670 போ் எழுதினா்
ஆசிரியா் தகுதித் தோ்வு: வேலூரில் முதல் தாளை 1,777 போ் எழுதினா்

ஆசிரியா் தகுதித் தோ்வு: தென்காசி மாவட்டத்தில் 1311 போ் எழுதினா்
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



