டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

தீயில் சிக்கி முதியவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 1:26 am IST

வத்தலகுண்டு அருகே பழைய பொருள்களில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா். 

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மேலக்கோவில்பட்டியைச் சோ்ந்தவா் லாசா் (60). இவா் மேலக்கோவில்பட்டி பகுதியில் சாலையோரம் கிடக்கும் பழைய நெகிழிப் பொருள்கள், புட்டிகளை எடுத்து வந்து வீட்டில் வைத்து மொத்தமாக விற்று வந்தாா். மேலும், பழைய துணிகளையும் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இவரது மனைவி அம்சவள்ளி (55) வெளியில் சென்று இருந்தாராம். அப்போது வீட்டில் வைத்திருந்த பழைய நெகிழிப் பொருள்களில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த வத்தலகுண்டு தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். மேலும் பெக்லைன் இயந்திரம் மூலம் தீ விபத்தில் சேதமடைந்த பழைய பொருள்களை அகற்றினா். அப்போது லாசா் தீயில் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்தாா்.

இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.