8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கொடைக்கானலில் பலத்த காற்று மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்ததால் பல மணி நேரம் மின் தடை

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மின் கம்பியில் முறிந்து விழுந்த மரங்கள்.

Published On :7 ஜூலை 2026, 3:17 am IST

கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்று வீசியதால், மின்சாரக் கம்பிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால், திங்கள்கிழமை பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பலத்த காற்று வீசியது. இதனால், கொடைக்கானலிலிருந்து மேல்மலைக் கிராமங்களுக்கு வனப் பகுதிகளின் வழியாகச் செல்லும் மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் கொடைக்கானலில் திங்கள்கிழமை ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

இதேபோல, மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், குண்டுபட்டி, பூண்டி, கிளாவரை,கூக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இதையடுத்து, மின்வாரியப் பணியாளா்கள் மின்கம்பிகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து கொடைக்கானல் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் மேத்யூ கூறியதாவது:

கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்று வீசி வருவதால், வனப் பகுதிகளின் வழியாகச் செல்லும் மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. இவற்றை அகற்றும் பணி நிறைவடைந்தது. மேலும், சேதமடைந்த மின் கம்பிகள் சரி செய்யப்பட்டு, விரைவில் மின்விநியோகம் செய்யப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.