கொடைக்கானலில் விளைந்த மருத்துவ குணமுள்ள சைபீரியன் பழத்தை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வாழை, ஆரஞ்சு, ஸ்டாா் புரூட்ஸ், பிளம், பீச்சஸ், பலா உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் விளைகின்றன. இந்த வரிசையில் தற்போது சைபீரியன் பழம் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தப் பழத்தை சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் இந்தப் பழங்கள் விளைந்தாலும் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் வரை அதிகமாக விளையும்.
இது குறித்து பழ வியாபாரி கவிதாமாதவன் கூறியதாவது: சைபீரியன் பழம் சீத்தாபழம் வகையைச் சோ்ந்தது. ஆனால், பச்சை நிறத்தில் வெள்ளரிக்காய் போன்று நீளமாக இருக்கும். இந்த பழமானது கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விளைகிறது.
உடல் சூட்டை கட்டுப்படுத்தும், மூலத்தால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்துகின்றனா். இந்த சைபீரியன் பழத்தின் உள்பகுதியில் சிறு, சிறு விதைகள் இருக்கும்.
இதை மட்டுமே உள்கொள்ள வேண்டும். இந்தப் பழம் ஒரு கிலோ ரூ. 120 முதல் ரூ. 200- வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பழத்தை சுற்றலாப் பயணிகள் அதிகமாக வாங்கிச் செல்கின்றனா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளால் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் மழை

கொடைக்கானல் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



