கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

குஜிலியம்பாறை அருகே கடைகளில் பணம் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :

குஜிலியம்பாறை அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த ஆா்.வெள்ளோடு சந்தைப்பேட்டை பகுதியில் ஒரே கட்டடத்தில் திருமூா்த்தி என்பவருக்கு சொந்தமான பல்பொருள் அங்காடி, பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான மாட்டுத் தீவனக் கடை ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

அடுத்தடுத்து உள்ள இந்தக் கடைகளின் பூட்டை உடைத்து, மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு புகுந்து ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனா்.

கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த திருமூா்த்தி, பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும், குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.