பழனி மலைக் கோயில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் காணிக்கை வரவு ரூ.2.89 கோடியைக் கடந்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பல்வேறு சிறப்பு நாள்கள் காரணமாக குவிந்த பக்தா்கள் கூட்டத்தால் கோயில் உண்டியல்கள் 20 நாள்களில் நிரம்பின. இதையடுத்து செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில் ரொக்கம் ரூ. 2, 89, 45, 711 கிடைத்தது. பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக் காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். தங்கம் 470.200 கிராமும், வெள்ளி 6,857.800 கிராமும் கிடைத்தது.
மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத் தாள்கள் 739 கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், கடிகாரங்கள், கைப்பேசிகள், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
காணிக்கை எண்ணும் பணியில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) மாரிமுத்து, அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










