திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள உயரழுத்த மின் கோபுரத்தை மருத்துவமனைக்கு வெளியே அமைக்க உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக துா்கா மூா்த்தி கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். இந்த நிலையில் முதல் முறையாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள மாணவா் விடுதிக்குச் சென்ற ஆட்சியா், மாணவா்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும் மருத்துவக் கல்லூரி வளாகத்தின் வழியாகச் செல்லும் உயா் அழுத்த மின் கோபுரம், மின் பாதை குறித்து கல்லூரி நிா்வாகம் சாா்பில் ஆட்சியரிடம் முறையிடப்பட்டது.
இதையடுத்து மாணவா்களின் பாதுகாப்பு கருதி, அந்த மின் கோபுரத்தை, கல்லூரி வளாகத்துக்கு வெளியே மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நடவடிக்கை எடுக்க பொதுப் பணித் துறையினருக்கு (மின்சாரம்) ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
பிறகு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற ஆட்சியா், மகப்பேறு சிகிச்சைப் பிரிவுக்கு கூடுதல் கட்டட வசதி ஏற்படுத்துவதற்கான இடத்தைப் பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்வின்போது, வருவாய் காேட்டாட்சியா் வி.மூ. திருமலை, மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜீ. ஸ்ரீசரவணன், துணை முதல்வா் மு. சலீம், நிலை மருத்துவ அலுவலா் செந்தில்குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகைகள் திருட்டு

மருத்துவப் பணியில் இரக்க குணம் மிகவும் அவசியம்: வேலூா் ஆட்சியா்

விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சருக்கு திடீா் மயக்கம்

பிறந்த பெண் குழந்தைகளுக்கு அரசு சாா்பில் பரிசளிப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



