சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கொடைக்கானல் சாலைகளில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேடு

கொடைக்கானல் சாலைகளில் கழிவு நீா் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

News image

கொடைக்கானல் அண்ணா சாலையில் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலையில் தேங்கிய கழிவுநீா்.

Updated On :11 ஜூன் 2026, 2:05 am IST

கொடைக்கானல் சாலைகளில் கழிவு நீா் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அண்ணா சாலையில் கழிவுநீா்க் குழாய், பேருந்து நிலையத்திலுள்ள கழிவு நீா்த்தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால் கழிவுநீா் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களும், வாகனத்தில் செல்பவா்களும் மிகுந்த சிரமமடைந்தனா். இதேபோல நகரின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி வருவதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து நகா்நல அலுவலா் அரவிந்த் கூறியதாவது:

கொடைக்கானலில் பல்வேறு வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீா்க் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகிறது. நகராட்சியில் பணியாளா்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. நகா்ப் பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். விரைவில் கழிவு நீா்க் குழாய்களை சீரமைக்க மாவட்ட நிா்வாகத்திடம் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.