கொடைரோடு அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் 5 மாணவா்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சிலுக்குவாா்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பள்ளி மாணவா்களை பொட்டிசெட்டியபட்டி கிராமத்துக்கு ஏற்றி சென்ற ஆட்டோ மாலையகவுண்டன்பட்டி பிரிவு அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஓட்டுநா் லோகேஷ் (31), மாணவா் ரித்தீஸ் (17), மற்றும் 4 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு , அம்மையநாயக்கனூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த நிலக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்
அய்யனாா் காயமடைந்த மாணவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.
காயமடைந்தவா்கள் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்த விபத்து குறித்து, அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெறி நாய் கடித்து 3 போ் காயம்

ஆட்டோ கவிழ்ந்ததில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

ஆட்டோ கவிழ்ந்ததில் 7 போ் காயம்

ஆட்டோ கவிழ்ந்து மாணவா்கள் உள்பட 7 போ் காயம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



