திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சனிக்கிழமை காலை முதல் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கொடைக்கானலில் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், தற்போது, பருவநிலை மாற்றம் காரணமாக மழை பெய்யவில்லை. கடும் வெப்பம் நிலவியது. இதனால், பொதுமக்கள் பகலில் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதலே மிதமான மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால், மலைச் சாலைகளில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாகச் சென்றன. இந்த மழை காரணமாக, கொடைக்கானல் சுற்றுலா வந்த பயணிகளின் மகிழ்ச்சி அடைந்தனா்.
மேலும், இந்த மழையையும் பொருள்படுத்தாமல் சுற்றுலாத் தலங்களான வெள்ளிநீா் அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், குணாகுகை, பிரையண்ட் பூங்கா, கோக்கரஸ்வாக் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பாா்த்தனா். மேலும், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளால் போக்குவரத்து நெரிசல்

கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை

கொடைக்கானலில் மழையால் படகு சவாரி ரத்து: பயணிகள் ஏமாற்றம்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



