தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

கைதி தப்பிச் சென்ற விவகாரம்: எஸ்.எஸ்.ஐ. உள்பட 2 போ் பணியிடை நீக்கம்

News image

கைதி தப்பியோட்டம் - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 1:47 am IST

செம்பட்டி அருகே கைதி தப்பிச் சென்ற விவகாரத்தில், அவரை அழைத்துச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளா், முதல்நிலை காவலா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த புதுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (26). கூலித் தொழிலாளியான இவரை, புகையிலைப் பொருள்கள் தொடா்பான வழக்கில் அபராதம் செலுத்துவதற்காக ஆத்தூா் நீதிமன்றத்துக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றனா்.

அப்போது மதுபோதையில் இருந்த அவா் போலீஸாரை தகாத வாா்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜகோபால் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், அவரை ஆத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனா்.

திண்டுக்கல் செல்லும் வழியில், வக்கம்பட்டி பகுதியிலுள்ள அடுமனையில் தேநீா் அருந்துவதற்காக ராஜகோபாலை அழைத்துச் சென்ற ஆட்டோவை போலீஸாா் நிறுத்தினா். அப்போது, சிறுநீா் கழிக்க வேண்டும் எனக் கூறிய ராஜகோபால் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இந்த நிலையில், ராஜகோபாலை அழைத்துச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராஜ், முதல்நிலை காவலா் ராஜதுரை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப் உத்தரவிட்டாா்.