லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

இணையதள டெண்டர் விவகாரம்: 2 பேர் பணியிடை நீக்கம்!

இணையதள டெண்டர் விவகாரம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் தொடர்பாக...

suspended

பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்

Published On :

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் இணையதளம் வழியில் அறிவிக்கப்பட்ட டெண்டர் சில மணி நேரத்தில் முடிவடைந்ததாக எழுந்த விவகாரம் தொடர்பாக 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட காரைப்பேட்டை கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்காக, ரூ. 16.83 லட்சம் மதிப்பிலான டெண்டர் வெளியிடப்பட்டது.

இந்த ஒப்பந்த அறிவிப்பு, வெளியிடப்பட்ட அதே நாளிலேயே முடிவடைந்த நிலையில், இந்த டெண்டர் முன்கூட்டியே முடிந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த ஒப்பந்தத்தில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அறிவிப்பு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

ஒப்பந்த விதிகளின்படி, இணைய வழியில் வெளியிடப்படும் ஒப்பந்த அறிவிப்பானது, பங்கேற்பார்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில், மே 12 ஆம் தேதியே இணையதளத்தில் பங்கேற்பாளர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் மே 18 ஆம் தேதி ஒப்பந்த அறிவிப்பு தயாரிக்கப்பட்டு, மே 19 ஆம் தேதி வெளியிட்டப்பட்டது.

உரிய அதிகாரியிடமிருந்து ஒப்புதலைப் பெறாமலேயே, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உதவி பொறியாளர் இந்த குறுகிய கால ஒப்பந்த அறிவிப்பை (short-term tender) வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஒப்பந்த விதிமுறைகளை மீறியதற்காகவும், உரிய ஒப்புதல் இல்லாமல் குறுகிய கால ஒப்பந்த அறிவிப்பை வெளியிட்டதற்காகவும், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கே. சாந்தி மற்றும் உதவிப் பொறியாளர் கயல்விழி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Summary

Amidst criticism that a tender announced online by the Department of Rural Development was concluded within just a few hours, two individuals have been suspended in connection with this matter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.