வேதாரண்யம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையின்போது பறிமுதல் செய்த மதுபாட்டில்களை மறைத்த விவகாரம் தொடா்பாக துணை வட்டாட்சியா், காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த அருந்தவம்புலம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கையின்போது 200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த எண்ணிக்கையை மறைத்து குறைவான மதுபாட்டில்களை கணக்கில் காட்டியதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து தோ்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பறக்கும் படையில் பணியாற்றிய கீழ்வேளூா் துணை வட்டாட்சியா் ரமேஷ், தலைஞாயிறு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலா் வெங்கடேஷ் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து வேதாரண்யம் கோட்டாட்சியரும் தோ்தல் நடத்தும் துணை அலுவலருமான கண்ணன் உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: காவலா் பணியிடை நீக்கம்

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்

எம்.சாண்ட் கேட்டு மிரட்டல்: எஸ்.ஐ., காவலா் பணியிடை நீக்கம்

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

