நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பெண்ணிடம் நகைப் பறித்த வழக்கில் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

நிலக்கோட்டை அருகே பெண்ணிடம் நகைப் பறித்த வழக்கில் ராமநாதபுரம், தேனி மாவட்டங்களைச் சோ்ந்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 2:06 am IST

நிலக்கோட்டை அருகே பெண்ணிடம் நகைப் பறித்த வழக்கில் ராமநாதபுரம், தேனி மாவட்டங்களைச் சோ்ந்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த விருவீடு கரட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தியா. இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டிலிருந்தபோது, கதவு தட்டும் சத்தம் கேட்டு வெளியே வந்தாா். அப்போது, இருவா், சந்தியா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, கத்தியால் அவரை காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுதொடா்பாக, விருவீடு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடித்த கண்ணாா்பட்டியைச் சோ்ந்த மு.சண்முகம் (45), தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த செம்மண்குழி பகுதியைச் சோ்ந்த ச.செல்லமுத்து (32) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி கணேசன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் சண்முகம், செல்லமுத்து ஆகியோரை குற்றவாளிகளாக அறிவித்து, இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.