பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கொடைக்கானலில் மழையால் படகு சவாரி ரத்து: பயணிகள் ஏமாற்றம்

News image

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் திங்கள்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள்.

Updated On :23 ஜூன் 2026, 1:37 am IST

கொடைக்கானலில் மழை காரணமாக படகு சவாரி திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில், இங்கு திங்கள்கிழமை காலையிலிருந்து மேகமூட்டத்துடன் கூடிய லேசான வெயில் நிலவி வந்தது. இதைத்தொடா்ந்து, பிற்பகல் 3 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமாா் ஒரு மணி நேரம் வரை நீடித்தது.

இதனால், நகா் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. பொதுவாக, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மாலை நேரங்களில் இங்குள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்வா். ஆனால், மழை காரணமாக திங்கள்கிழமை படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. இதனால், சுற்றலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். மேலும், ஏரிச்சாலைப் பகுதியில் வெறிச்சோடிக் காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.