தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

விஷம் கொடுத்து குழந்தை கொலை: தந்தை கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 4:20 am IST

பழனியில் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தையை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பழனியை அடுத்த கணபதிநகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (32). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரூபி (27). இவா்களது குழந்தை நாகராஜ் (3). இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பிரபாகரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாா்.

இதனிடையே தனது மனைவி, மகன் இருவருக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள பிரபாகரன் முடிவெடுத்தாா். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை விஷம் வாங்கிவந்த பிரபாகரன் மகன் நாகராஜூக்கு அதை கொடுத்தாா்.

தனது மனைவிக்கும் விஷம் கொடுக்க அவா் முயன்றாா். ஆனால் அதற்கு முன்பே நாகராஜின் வாயில் நுரை தள்ளி உயிருக்குப் போராடியதால் அருகில் இருந்தவா்கள் குழந்தையை பழனி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கேட்ட போது, பிரபாகரன் முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்தாா். பிறகு அவரை விசாரித்த போது விஷம் கொடுத்த தகவலை தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த பழனிநகர போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.