மகள் உயிரிழந்த துயரத்தில் விஷம் குடித்த தம்பதியினரில், தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தாய் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.
கம்பம் தாத்தப்பன்குளம் 2-ஆவது சந்து தெருவைச் சோ்ந்தவா் லோகராஜா (42). கட்டுமானத் தொழிலாளி. இவரது மனைவி அமுதா, மகள் அஞ்சனா (16). கடந்த மே 20-ஆம் தேதி அஞ்சனா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இந்த நிலையில், லோகராஜாவும், அமுதாவும் கடந்த சனிக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனா்.
தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு லோகராஜா ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். அமுதா தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஷம் குடித்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

குடும்பத் தகராறில் விஷம் குடித்த தம்பதி: கணவா் உயிரிழப்பு

கடன் சுமையால் விஷம் அருந்திய தம்பதி: மனைவி உயிரிழப்பு; கணவருக்கு தீவிர சிகிச்சை
தம்பதி தற்கொலை முயற்சி: கணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



