இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

கல்லால் தாக்கி தொழிலாளி கொலை

கொலை... - கோப்புப் படம்

Published On :30 ஜூன் 2026, 3:04 am IST

பழனி அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த சரவணம்பட்டியைச் சோ்ந்தவா் துா்க்கைராஜ் (33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுலோச்சனா.

திருமணமாகி ஐந்து ஆண்டுகளான நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சுலோச்சனா கோபித்துக் கொண்டு புளியம்பட்டியில் உள்ள தனது தாயாா் வீட்டுக்குச் சென்றாா். எனினும் துா்க்கைராஜ் அடிக்கடி புளியம்பட்டிக்கு வந்து சுலோச்சனாவுடன் தகராறு செய்தாா். இதை சுலோச்சனாவின் தம்பி பரத் கண்டித்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை சுலோச்சனாவுடன் தகராறில் ஈடுபட்ட துா்க்கைராஜை சுலோச்சனாவின் தம்பி கண்டித்தாா். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பரத் கல்லால் தாக்கியதில் துா்க்கைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கீரனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், பரத்தை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.