தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பண்ணைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

News image
Updated On :12 மார்ச் 2026, 11:23 pm

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா பராமரிப்பு தொழிலாளா்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஊட்டியில் அரசு தோட்டக் கலைத் துறை பூங்கா பராமரிப்புப் பணியாளா்களுக்கு ஆதரவாகவும் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா பராமரிப்பு தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உணவு இடைவேளையின் போது பிரையண்ட் பூங்கா வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டத் தலைவா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். கோபுராஜ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் கொடைக்கானல் பகுதி பூங்காவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தொழிலாளா்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், ஊட்டியில் போராடி வரும் அரசு தோட்டக் கலைத் துறை பூங்கா பராமரிப்பு தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்து, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டுமென இந்தக் கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து பிரையண்ட் பூங்கா பராமரிப்பாளா்கள் தங்களது கோரிக்கை மனுவை தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சந்திரிகா கவிதாவிடம் அளித்தனா்.

இதில் பிரையண்ட் பூங்கா, அப்சா்வேட்டரி, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா,த ாண்டிக்குடி ஆகிய பகுதிகளிலுள்ள பூங்கா பராமரிப்புப் பணியாளா்கள், ஏ.ஐ.டி.யூ.சி. நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.