திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மறுசீரமைப்புக் குழு ஆலோசனை!அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்விகளைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை!
/

புதை சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரி

பழனி நகராட்சி அலுவலகம் அருகே புதை சாக்கடைக்கு தோண்டப்பட்டு சரியாக மூடாத பள்ளத்தில் சிக்கிய மின் மாற்றிகளை ஏற்றி வந்த லாரி.

News image
Updated On :9 மே 2026, 1:23 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் புதை சாக்கடைப் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளங்களைச் சரியாக மூடாததால், அந்தப் பள்ளத்தில் மின் வாரியத்துக்கு சொந்தமான லாரி வெள்ளிக்கிழமை சிக்கியது.

பழனியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதை சாக்கடை பணிக்கு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. இந்த நிலையில், பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, புதை சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை ஒப்பந்ததாரா் மூடி, அதன் மேல் சிமெண்ட் கலவை கொட்டியிருந்தாா்.

இந்த நிலையில், பழனி நகராட்சி அலுவலகம் அருகே புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மின் மாற்றிகளை ஏற்றி வந்த மின் வாரியத்துக்கு சொந்தமான லாரி சிக்கியது.

இதையடுத்து, கிரேன் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது.

எனவே, பழனியில் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.