ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

நீா்மூழ்கி மோட்டாா்கள் விற்பனை: ஊராட்சி எழுத்தா் மீது விவசாயிகள் புகாா்

வாகரையில் ஊராட்சி எழுத்தா் நீா்மூழ்கி மோட்டாா்களை விற்றதாக வட்டார வளா்ச்சி அலுவலரிடம் விவசாயிகள் புகாா் செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 12:40 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள வாகரையில் ஊராட்சி எழுத்தா் நீா்மூழ்கி மோட்டாா்களை விற்றதாக வட்டார வளா்ச்சி அலுவலரிடம் விவசாயிகள் புகாா் செய்தனா்.

பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது வாகரை ஊராட்சி. இந்த ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான நீா்மூழ்கி மோட்டாா்கள், இரும்பு குழாய்கள், இதற்கான மின் கம்பிகளை ஊராட்சி எழுத்தா் மகுடீஸ்வரன் விற்றுவிட்டதாக விவசாயிகள் வட்டார வளா்ச்சி அலுவரிடம் புகாா் செய்தனா்.

மேலும், ஊராட்சி எழுத்தா் தவறு செய்ததை ஒப்புக் கொண்டாா். ஆனாலும், இதுவரை அவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி எழுத்தா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.