பழனியில் தமிழக அளவில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான ஐவா் கால்பந்து போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
பழனி இட்டேரி சாலை மங்களகவுண்டா் திடலில் ஏ.என். ஸ்போா்ட்ஸ் அகாதெமி, தமிழக வெற்றிக் கழகம் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, சேலம், ஈரோடு, கோவை, கேரள மாநிலம் இடுக்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 48 அணிகள் பங்கேற்றன.
போட்டிகளை ஏ.என்.ஸ்போா்ட்ஸ் இயக்குநா் அதிதி நிஷா, அஸ்வினி உள்ளிட்டோா் தொடங்கி வைத்தனா். 8 வயது, 11 வயது, 14 வயது என மூன்று பிரிவு போட்டிகளில் சிறுவா்கள், சிறுமிகள் கலந்து கொண்டனா்.
போட்டிகள் முடிவில் 14 வயது பிரிவில் பழனி ஏ.என்.ஸ்போா்ட்ஸ் அகாதெமி முதலிடத்தையும், மன்னாா்குடியைச் சோ்ந்த கலாம் அகாதெமி இரண்டாமிடத்தையும் பெற்றன. 11 வயது பிரிவில் திருப்பூா் எஸ்.எப்.ஏ.டி. அணி முதலிடமும், அன்னை ஸ்போா்ட்ஸ் அகாதெமி இரண்டாமிடத்தையும் பெற்றனா்.
முன்னதாக பயிற்சியாளா் பாலாஜி வரவேற்றாா். வெற்றி பெற்றவா்களுக்கு தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா் காா்த்திக்ராஜா, செயற்குழு உறுப்பினா் பழனி பாலன், நகரச் செயலா் சிவா உள்ளிட்டோா் பரிசுகளை வழங்கினா்.
தொடர்புடையது

வழக்குரைஞா் குடும்பத்துக்கு நிதியுதவி

பழனியில் அதிவேகத்தில் செல்லும் ஆட்டோக்கள்: பொதுமக்கள் அச்சம்

பழனியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது

மாணவா்களுக்கான கால்பந்து பயிற்சி முகாம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



