/
பழனி மேம்பாலப்பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட நிலையில் சாலைகள் சேதமடைந்ததால் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாயினா்.
பழனி புதுதாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கியுள்ளதால் பேருந்துகள், லாரிகள், சுற்றுலா வாகனங்கள்பழைய தாராபுரம் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு சுமாா் ஒரு வாரமான நிலையில் தேவாலயம் எதிரே உள்ள ராஜேந்திரா சாலை மிகவும் சேதமடைந்தது.
மேலும், சஞ்சய் மருத்துவமனை எதிரே இருந்த பாலம் பாதி அளவுக்கு உடைந்து பேருந்துகள் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் இயக்கும் ஓட்டுநா்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, போா்க்கால அடிப்படையில் சாலை, பாலப்பணிகள் முடிக்காவிட்டால் பழனியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நேரிடும் என தன்னாா்வலா்கள் தெரிவித்தனா்.









