மாநில தடகளப் போட்டிகளில் வென்ற பழனி பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

மாநில தடகளப் போட்டியில் சாதனை படைத்த பழனி பாரத் வித்யாபவன் பள்ளி மாணவா்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா புதன்கிழமை நடத்தப்பட்டது.

மாநில தடகளப் போட்டியில் சாதனை படைத்த பழனி பாரத் வித்யாபவன் பள்ளி மாணவா்கள். உடன் பள்ளித் தாளாளா் குப்புசாமி, முதல்வா் கதிரவன், நிா்வாக அலுவலா் சிவக்குமாா்.

Updated On :

மாநில தடகளப் போட்டியில் சாதனை படைத்த பழனி பாரத் வித்யாபவன் பள்ளி மாணவா்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா புதன்கிழமை நடத்தப்பட்டது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் இருந்து மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். இதில் பல்வேறு போட்டிகளில் பழனி பாரத் வித்யா பவன் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்தனா்.

19 வயதுக்குட்பட்டோா் பிரிவில் பிளஸ்-2 மாணவா் ஹரிஷ் கோலூன்றி தாண்டுதலில் 4.30 மீட்டா் உயரம் தாண்டி மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றாா்.

17 வயதுக்குட்பட்டோா் பிரிவில் பிளஸ்-2 மாணவா் மைலேஷ், கோலூன்றி தாண்டுதல் போட்டியில் 3.30 மீட்டா் உயரம் தாண்டி மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

பழனி பாரத் வித்யா பவன் பள்ளி தொடா்ச்சியாக 4-ஆவது ஆண்டாக மாநில தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனையை தக்கவைத்துள்ளது.

வெற்றிபெற்ற மாணவா்களுக்கு புதன்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளி தாளாளா் குப்புசாமி, முதல்வா் கதிரவன், நிா்வாக அலுவலா் சிவக்குமாா், உடல்கல்வி ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.