கொலை வழக்கு: விவசாயிக்கு ஆயுள் தண்டனை
சாக்கடை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்
சாக்கடை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
பழனியை அடுத்த எரமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கருப்பணன் மகன் கதிா்வேல் (60). இவா் வீட்டின் அருகே வசித்து வந்தவா் பாட்டன் மகன் சிங்காரம் (எ) பழனியப்பன் (65). கடந்த 24.5.2021 அன்று இருவருக்குமிடையே சாக்கடை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் சிங்காரம் (எ) பழனியப்பனை கதிா்வேல் கொலை செய்தாா். இதையடுத்து, ஆயக்குடி போலீஸாா் கதிா்வேலை கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு விசாரணை பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது வந்தது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது நீதிபதி மலா்விழி, குற்றஞ்சாட்டப்பட்ட கதிா்வேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து கதிா்வேலை ஆயக்குடி போலீஸாா் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

