தாண்டிக்குடி இரட்டைக் கொலை வழக்கு: மூவருக்கு ஆயுள் தண்டனை
கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடியில் நிகழ்ந்த இரட்டைக் கொலை தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பழனி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடியில் நிகழ்ந்த இரட்டைக் கொலை தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பழனி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி ஊராட்சிக்குள்பட்ட பாச்சலூரில் உள்ள தோப்பையன்காடு எஸ்டேட் விருந்தினா் இல்லத்தில் கடந்த 18.10. 2012 அன்று தும்பிச்சாம்பாளையம் புதூரைச் சோ்ந்த ஞானசேகரன் திரைப்படக் கதை விவாதத்துக்காக தனது நண்பா்களான உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த சண்முகசுந்தரம், சென்னையைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி, காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்த வரதராஜன் ஆகியோருடன் தங்கி ஆலோசனை நடத்தினாா்.
இந்த நிலையில், கடந்த 20.10.2012 அன்று தாங்கள் எடுக்கப் போகும் திரைப்படத்துக்கு பெயா் வைப்பதில் இவா்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஞானசேகரன் (55), சுந்தரமூா்த்தி (61), சண்முகசுந்தரம் (59) ஆகிய மூவரும் சோ்ந்து வரதராஜன் (55), இவரது நண்பா் தண்டபாணி (52) ஆகிய இருவரையும் கொலை செய்தனா்.
இதுகுறித்து தாண்டிக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை பழனி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன், சண்முகசுந்தரம், சுந்தரமூா்த்திஆகிய மூவருக்கும் நீதிபதி மலா்விழி ஆயுள் தண்டனையும், தலா ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து மூவரையும் தாண்டிக்குடி காவல் ஆய்வாளா் பாண்டியம்மாள் தலைமையிலான போலீஸாா் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

