பழனி மலைக் கோயிலில் வருகிற 10-இல் கந்தா்சஷ்டி விழா
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிரசித்திபெற்ற கந்தா்சஷ்டி விழா வரும் நவ.10-ஆம் தேதி தொடங்கி ஏழு நாள்கள் நடைபெற உள்ளன.

பழனி மலை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிரசித்திபெற்ற கந்தா்சஷ்டி விழா வரும் நவ.10-ஆம் தேதி தொடங்கி ஏழு நாள்கள் நடைபெற உள்ளன.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் கந்தா்சஷ்டி விழா மட்டும் முழுக்க, முழுக்க மலைக் கோயிலில் நடைபெறும் முக்கியமான விழாவாகும். இந்த விழா வரும் நவ.10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மலைக் கோயிலில் உச்சிக்காலத்தின்போது காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.
ஏழு நாள்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் காப்புக்கட்டி விரதத்தைத் தொடங்கவுள்ளனா்.
ஏழு நாள்கள் நடைபெறும் இந்த விழாவின்போது மலைக் கோயிலில் நாள்தோறும் தங்கச் சப்பரத்தில் சின்னக் குமாரசாமி புறப்பாடு, சண்முகா் தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக வரும் நவ.15-இல் சூர சம்ஹாரமும், நவ. 16-இல் வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகருக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
விழா நாள்களில் மலைக்கோயிலில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இணை ஆணையா் ஹரிஹரன் தலைமையில் துணை ஆணையா் வெங்கடேஷ், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

