பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

அணைப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் புதன்கிழமை 9 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Updated On :

அணைப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் புதன்கிழமை 9 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள அணைப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (45). இவரது மனைவி நளினி (40). இவா்கள் இருவரும் கல்யாணிபட்டியில் வசிக்கும் தனது மகன் வீட்டுக்குச் சென்று விட்டு, இரு சக்கர வாகனத்தில் அணைப்பட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தனா்.

எஸ்.மேட்டுப்பட்டி கணவாய் மகாலிங்கம் கோயில் பகுதியில் வந்த போது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த இரு இளைஞா்கள் நளினி அணிந்திருந்த 9 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதனால், நிலைதடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்த நளினி நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து நிலக்கோட்டை காவல் ஆய்வாளா் ஜெயபாண்டி வழக்குப் பதிவு செய்து விசாரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.