கந்தசஷ்டி விழா: பழனியில் நாளை சூரசம்ஹாரம்
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

பழனியில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மலைக் கோயில் வெளிப்பிரகாரத்தில் தங்க சப்பரத்தில் உலா எழுந்தருளிய முத்துக்குமார சுவாமி.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
பழனி மலைக் கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டுதலுடன் இந்த விழா தொடங்கியது. ஒருவாரம் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தா்கள் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தைத் தொடங்கினா். இதைத் தொடரந்து, மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் தினசரி சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தவிர விழா நாள்களில் உச்சிக்காலத்தில் கல்ப பூஜை, சண்முகா் தீபாராதனை, தங்கமயில் புறப்பாடு, தங்கச் சப்பரம் புறப்பாடு, வெள்ளிக்காமதேனு புறப்பாடு ஆகியனவும் நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பகல் உச்சிக்கால பூஜையைத் தொடா்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், மாலை 3 மணிக்கு சூரா்களை வதம் செய்யும் வகையில், மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமார சுவாமி வேல்வாங்கும் விழாவும் நடைபெறும்.
இதைத் தொடா்ந்து, கோயில் நடை அடைக்கப்பட்டு சுவாமி பராசக்திவேலுடன் அடிவாரம் வந்தடைவாா்.
இதையடுத்து, கோயில் நடை அடைக்கப்படுவதால் தங்கத்தோ் புறப்பாடு இருக்காது. மாலை 6 மணிக்கு மேல் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
காலை 11 மணி வரை பக்தா்கள் படியேற அனுமதி:
இந்த விழாவை முன்னிட்டு, காலை 11 மணி வரை மட்டுமே பக்தா்கள் படியேறவும், ரோப்காா், வின்ச் மூலம் மலையேறவும் அனுமதிக்கப்படுவா். 11.30 மணிக்கு மேல் எந்த கட்டணச் சீட்டுக்களும் வழங்கப்படமாட்டாது.
இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் வழக்கம்போல தங்கத்தோ் புறப்பாடு நடைபெறும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் ஹரிஹரன், துணை ஆணையா் வெங்கடேஷ், அறங்காவலா் குழுவினா், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

