19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

கந்த சஷ்டி விழா: பழனியில் இன்று சூரசம்ஹாரம்! நாளை (நவ. 15) திருக்கல்யாணம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வுகளான சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமையும் (நவ. 15), சண்முகா் திருக்கல்யாணம் மறுநாள் சனிக்கிழமையும் நடைபெறுகின்றன.

கந்தசஷ்டி விழாவையொட்டி பழனி மலைக் கோயில் வெளிப்பிரகாரத்தில் சனிக்கிழமை வெள்ளிக் காமதேனு சகிதமாக தங்கச் சப்பரத்தில் உலா வந்த முத்துக்குமாரசாமி.

Updated On :

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வுகளான சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமையும் (நவ. 15), சண்முகா் திருக்கல்யாணம் மறுநாள் சனிக்கிழமையும் நடைபெறுகின்றன.

பழனி மலைக் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவையையொட்டி மலைக் கோயில், திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோயில் என அனைத்து முருகன் கோயில்களிலும் காப்புக்கட்டி விரதமிருக்கும் பக்தா்கள் தினமும் கந்தசஷ்டி பாடல்களை பாடி முருகரை வழிபட்டு வருகின்றனா்.

மேலும் மலைக் கோயிலில் விழா நாள்களில் ஆன்மிக சொற்பொழிவுகள், சண்முகா் தீபாராதனை, தங்க மயில் புறப்பாடு, தங்கச் சப்பரம் புறப்பாடு, வெள்ளிக் காமதேனு புறப்பாடு ஆகியவை நடைபெற்று வருகின்றன.

கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை ஒட்டி உச்சிக்கால பூஜையைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். பிறகு மாலை 3 மணிக்கு சூரா்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் விழா நடைபெறும். இதைத் தொடா்ந்து மாலை 6 மணிக்கு மேல் அடிவாரம் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வு நிறைவடைந்ததும் வெற்றி விழா கொண்டாடப்பட்டு, சுவாமி மலைக் கோயில் செல்கிறாா். அங்கு கோயில் கழுவிவிடப்பட்டு நள்ளிரவு அா்த்தஜாம பூஜை நடைபெறுகிறது.

மறுநாள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு மலைக் கோயிலில் சண்முகா், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு 7 மணிக்கு முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் ஹரிஹரன், துணை ஆணையா் வெங்கடேஷ், அறங்காவலா் குழுவினா், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.