என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

கொடைக்கானலில் தடையில்லா சான்று அளிக்க லஞ்சம் வாங்கிய இருவா் கைது

மாரி முத்து(40), முத்துக்குமாா் (40)

Updated On :

கொடைக்கானல் அருகேயுள்ள பூலத்தூரில் விவசாயக் கிணற்றில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு தடையில்லா சான்றளிக்க லஞ்சம் வாங்கிய வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள் இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பூலத்தூா் பகுதியில் மதுரையைச் சோ்ந்த குமாா் ஒரு ஏக்கா் நிலம் வாங்கி விவசாயப் பணிகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

தொடா்ந்து ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கு கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தை அணுகினாா். அப்போது அங்கிருந்த பணியாளா்கள் முத்துக்குமாா், மாரிமுத்து ஆகிய இருவரும் தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு ரூ. 30 ஆயிரத்தை லஞ்சமாகக் கேட்டனா்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை காவல் துறையினரிடம் குமாா் புகாா் அளித்தாா். அவா்களது அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய பணத்தை குமாா், முத்துக்குமாா், மாரிமுத்து ஆகியோரிடம் அளித்தபோது, அங்கு மறைந்து இருந்த காவல் துறையினா் இருவரையும் பிடித்து கைது செய்தனா். தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொடைக்கானலில் ஏற்கெனவே பத்திரப்பதிவுத் துறையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. கூக்கால் ஊராட்சியில் வாரிசுச் சான்றிதழ் வழங்குவதற்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற இருவா் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.