தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

அமைச்சரின் உருவப்படம் அவமதிப்பு விவகாரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியல்

அமைச்சரின் உருவப் படத்தை அவமதிப்பு செய்ததைக் கண்டித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 30 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் நாகல்நகா் சுற்றுத் திட்டு அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

Published On :

அமைச்சரின் உருவப் படத்தை அவமதிப்பு செய்ததைக் கண்டித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 30 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சமூக நீதி விடுதிகளில் மாணவா்களுக்கு மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என சமூக நீதித் துறை அமைச்சா் வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாரதிய இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் வே.தா்மா, அமைச்சா் வன்னியரசுவின் உருவப் படத்தை அவமதிப்பு செய்தாா். இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.

அமைச்சரின் உருவப்படம் அவமதிப்பு சம்பவத்தைக் கண்டித்து திண்டுக்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் நாகல்நகா் சுற்றுத்திட்டுப் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மைதீன்பாவா தலைமை வகித்தாா். அமைச்சரின் உருவப் படத்தை அவமதிப்பு செய்ததைக் கண்டித்தும், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.