ஆம்னி பேருந்தில் நகை திருட்டு: 3 போ் கைது
வத்தலகுண்டு அருகே ஆம்னி பேருந்தில் கேரள பெண்ணின் 8 பவுன் தங்க நகையைத் திருடிய மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
வத்தலகுண்டு அருகே ஆம்னி பேருந்தில் கேரள பெண்ணின் 8 பவுன் தங்க நகையைத் திருடிய மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பட்டிகாராவைச் சோ்ந்த ஜிக்கி மேன் மனைவி சுமா (55). இவா், கடந்த மாதம் 28-ஆம் தேதி இடுக்கியிலிருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்தில் சென்றாா்.
இந்தப் பேருந்து வத்தலகுண்டு அருகே வந்தபோது, வத்தலகுண்டு - பெரியகுளம் சாலையில் உள்ள தனியாா் உணவகம் முன் நிறுத்தப்பட்டது. அப்போது, சுமாவும் உணவு அருந்தச் சென்று விட்டு, பேருந்து இருக்கைக்கு வந்த போது, 8 பவுன் நகையுடன் இருந்த பை காணாமல் போனது தெரிய வந்தது.
இதுகுறித்து வத்தலகுண்டு காவல் துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா். உணவக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மத்திய பிரதேச மாநிலம், தாா் மாவட்டம், கெலா் வாகிா் ஊரைச் சோ்ந்த மக்சூத் கானை (35) கைது செய்து, 8 பவுன் நகையைப் பறிமுதல் செய்தனா்.
தமிழ்நாட்டில் சாலையோர உணவகங்களில் நிறுத்தப்படும் ஆம்னி பேருந்துகளில் இவா் திருடி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



