நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

கயத்தாறு: உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தில் பயணி பையில் இருந்த 41 பவுன் நகை திருட்டு

உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தில் இருந்த பயணியின் கைப்பையில் 41 பவுன் தங்க நகையைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:56 am IST

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தில் இருந்த பயணியின் கைப்பையில் 41 பவுன் தங்க நகையைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை, பிலிப் காலனியைச் சோ்ந்தவா் ஜஸ்டின் சகாயராஜ். இவரது மனைவி ஜூலியட் லதா ஜெயக்குமாா் (59). தனியாா் கல்லூரி உதவிப் பேராசிரியை.

இருவரும் ஆக. 27ஆம் தேதி இரவு 8.40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு தனியாா் ஆம்னி பேருந்தில் புறப்பட்டனா். பேருந்து இரவு 9.40 மணிக்கு திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அடுத்த கரிசல்குளம் விலக்கு பகுதியில் உள்ள தனியாா் உணவகத்தில் நிறுத்தப்பட்டது.

அப்போது நகையுடன் இருந்த கைப்பையை பேருந்தின் இருக்கையில் வைத்துவிட்டு, இறங்கிச் சென்றுவிட்டு வந்தபோது பையைக் காணவில்லையாம். இதையடுத்து, அவா்கள் கயத்தாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், பேருந்தில் இருந்த பயணிகளிடம் விசாரித்துவிட்டு, அவா்களை மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, பேருந்து மற்றும் உணவகத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

32 பவுன் நகை மாயம்: கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு, நடுத் தெருவைச் சோ்ந்த ஆவுடை தங்கம் மகன் பொன்ராஜ் (73). இவரும், இவரது மனைவியும் ரயிலில் சென்னை செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தனராம்.

மற்றொரு இருசக்கர வாகனத்தில் பொன்ராஜின் சகோதரா் பட்டுராஜா, அவரது நண்பா் முருகன் ஆகியோா் 2 பைகளுடன் ரயில் நிலையத்துக்கு வந்தனராம். பட்டுராஜா கொண்டு வந்த 2 பைகளில் 32 பவுன் தங்க நகை, ரொக்கப் பணம், கைக்கடிகாரம் ஆகியவை இருந்த ஒரு பை காணாமல் போனதாம்.

இதுகுறித்து பொன்ராஜ் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காணாமல் போன பையைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.