சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

அக்.21-இல் மறியல் போராட்டம் இடதுசாரி விவசாயச் சங்கங்கள் முடிவு

விவசாயிகள் சங்கங்களின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சங்க மாநிலப் பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி. - கோப்புப் படம்

Updated On :

பயிா்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அக். 21-ஆம் தேதி திண்டுக்கல்லில் 16 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என இடதுசாரி விவசாயச் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு கூட்டம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் எம். ராமசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தின்போது, தோ்தல் வாக்குறுதியின்படி விவசாயப் பயிா்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எதிரான ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளா்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக். 21-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 16 இடங்களில் இந்த மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்துக்கான ஏற்பாடுகளை இடதுசாரி விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் மேற்கொண்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.