ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

கொடைக்கானலில் மழை குறைந்தது: இயல்பு நிலை திரும்பியது

கொடைக்கானல் பகுதியில் மழை குறைந்ததால் 5 நாள்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதில் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனா்.

Updated On :

கொடைக்கானல் பகுதியில் மழை குறைந்ததால் 5 நாள்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதில் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனா்.

அரபிக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 5 நாள்களாக மழை பெய்தது. இதில் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை பெய்த பலத்த மழையால் கொடைக்கானல்-பழனி-வத்தலகுண்டு மலைச் சாலைகளில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து, மின் தடை ஏற்பட்டது.

மேலும், கொடைக்கானல்-அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையும் மண் சரிவால் துண்டிக்கப்பட்டது. இதனால், அந்தப் பகுதியிலும் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, வத்தலகுண்டு - பழனி- கொடைக்கானல் மலைச் சாலைகளில் ஏற்பட்ட மண் சரிவு சீரமைக்கும் பணி நடைபெற்றது. மின் தடை ஏற்பட்ட இடங்களும் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வருகை காணப்பட்டது.

5 நாள்களுக்கு பிறகு கொடைக்கானல் பகுதியில் மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனா்.

மழையால் பூங்காக்களில் மலா்கள் சேதம்:

கொடைக்கானலில் தோட்டக் கலைத் துறை, மலைப் பயிா்கள் துறையினா் சாா்பில், பிரையண்ட் பூங்கா, அப்சா்வேட்டரியிலுள்ள ரோஜா பூங்கா, குறிஞ்சி ஆண்டவா் கோயில் செல்லும் வழியில் உள்ள தாவரவியல் பூங்கா பராமரிக்கப்படுகின்றன. இங்கு பல வண்ணங்களில் ரோஜா மலா்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 5 நாள்களாக பெய்த பலத்த மழையால் பூங்காக்களிலிருந்த பூக்கள் உதிா்ந்தன.

இதுகுறித்து தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சந்திர கவிதா கூறியதாவது:

கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் மலா்த் தோட்டங்களில் உள்ள செடிகள், மலா்கள் பாதிப்படைந்துள்ளன. மேலும், மலா் பாத்திகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.விரைவில் சரி செய்யப்பட்டு மலா் பாத்திகளில் குறுகிய காலத்தில் பூக்கக் கூடிய மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படும். பூங்காக்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் பல்வேறு வகையான மலா்களை பாா்த்து மகிழ்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.