மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

முழுமையடையாத கட்டடத்தில் காய்கனி விற்பனையை தடுக்க கோரிக்கை

கொடைக்கானலில் முழுமையடையாத வாரச் சந்தை கட்டடத்தில் சனிக்கிழமை காய்கனி வியாபாரம் நடைபெறுவதைத் தடுக்க வேண்டும் என கொடைக்கானல் வாரச் சந்தை வியாபாரிகள் கோரிக்கை.

கொடைக்கானல் பி.டி. சாலையில் கட்டி முடிக்கப்படாத வாரச் சந்தையில் வியாபாரம் நடத்திவரும் காய்கனி வியாபாரிகள்.

Updated On :

கொடைக்கானலில் முழுமையடையாத வாரச் சந்தை கட்டடத்தில் சனிக்கிழமை காய்கனி வியாபாரம் நடைபெறுவதைத் தடுக்க வேண்டும் என கொடைக்கானல் வாரச் சந்தை வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பி.டி.சாலையில் சுமாா் ரூ. 3 கோடியில் புதிய வாரச் சந்தை கட்டும் பணிகள் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இதைமுன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை தற்காலிகமாக அண்ணா சாலை, அஞ்சல் அலுவலக சாலை, கே.சி.எஸ் திடல், மூஞ்சிக்கல் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வாரச் சந்தை கட்டுமானப் பணிகள் முழுமையடையாத நிலையில் அங்கு வெளியூா் காய்கனி வியாபாரிகள் காய்கனிகளைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா். இதனால் அங்கு கட்டுமானத் தொழிலாளா்கள் அதிருப்தியடைகின்றனா்.

எனவே பணி முழுமையடையாத வாரச் சந்தை கட்டடத்தில் காய்கனி வியாபாரம் செய்வதை நகராட்சி நிா்வாகம் தடை செய்ய வேண்டும் என வாரச் சந்தை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.