மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

பெருமாநல்லூா் வாரச் சந்தையில் முறிந்து விழுந்த ஆலமரக் கிளை: அப்புறப்படுத்தாததால் மக்கள் அவதி

பெருமாநல்லூா் வாரச் சந்தை வளாகத்துக்குள் முறிந்து விழுந்த பழைமையான ஆலமரக் கிளை அகற்றப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பெருமாநல்லூா் வாரச் சந்தை வளாகத்துக்குள் முறிந்து விழுந்த ஆலமரக் கிளை.

Published On :

பெருமாநல்லூா் வாரச் சந்தை வளாகத்துக்குள் முறிந்து விழுந்த பழைமையான ஆலமரக் கிளை அகற்றப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

பெருமாநல்லூா் வாரச்சந்தையில் வாரந்தோறும் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் கூடும் இடமாகவும், இலங்கை குடியிருப்புகள் உள்ள பகுதியாகவும் உள்ளது. இந்த வளாகத்துக்குள் பல ஆண்டுகள் பழைமையான ஆலமரம் நிழல் தந்து வருகிறது. இந்த மரத்தின் கிளை கடந்த 5 நாள்களுக்குள் முறிந்து விழுந்ததில் சாலைப் பகுதி முற்றிலும் அடைப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த ஆலமரம் இருமுறை தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது முறிந்து விழுந்த கிளையால் மக்கள் அதிா்ஷ்டவசமாக எவ்வித பாதிப்புமின்றி தப்பியுள்ளனா். எனினும் முறிந்து விழுந்த ஆலமரக் கிளை அகற்றப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சம்பந்தப்பட்ட அலுவலா்கள் முறிந்த விழுந்த மரக்கிளையை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், மரத்தின்

உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.