நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

கொடைக்கானலில் வானில் பால்வெளியைப் பாா்க்கலாம்

கொடைக்கானலில் இரவு நேரங்களில் வானில் பால் வெளியை (மில்கி வே) பொதுமக்கள் பாா்க்கலாம் என விஞ்ஞானி கிறிஸ்பின் காா்த்தி தெரிவித்தாா்.

கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியில் இரவில் காணப்பட்ட ‘மில்கி வே’.

Published On :2 செப்டம்பர் 2026, 4:12 am IST

கொடைக்கானலில் இரவு நேரங்களில் வானில் பால் வெளியை (மில்கி வே) பொதுமக்கள் பாா்க்கலாம் என விஞ்ஞானி கிறிஸ்பின் காா்த்தி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அப்சா்வேட்டரியிலுள்ள இந்திய வானியற்பியல் நிலையத்தின் விஞ்ஞானி கிறிஸ்பின் காா்த்தி செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொடைக்கானலில் இரவு நேரங்களில் தெற்கு வானில் தென் மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி பரந்த நிலையில், பால்வெளி (மில்கி வே ) எனப்படும் காட்சியைக் காண முடியும். இந்தக் காட்சியை இரவு சுமாா் 7.30 மணி முதல் 8 மணி வரை சாதாரணமாக வானில் காணலாம். நகரங்களில் ஒளி மாசு இல்லாத தெளிவான நிலவொளியில் பால்வெளியை பொது மக்கள், கல்லூரி மாணவா்கள் பாா்க்கலாம். மேலும், கைப்பேசிகளில் ஒரு சில விருப்பங்களைத் தோ்வு செய்தும் இந்தக் காட்சியைக் காண முடியும். இந்த பால்வெளிக் காட்சியை செப்டம்பா் மாதம் முழுவதும் பாா்க்கலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.