பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

டைம் டிராவலிங் முயற்சி வெற்றியா! 4413-ம் ஆண்டில் வானில் கார்கள், சாலை முழுக்க ரோபோக்களா?

டைம் டிராவலிங் செய்தவர் என்று கூறுபவர், 4413-ம் ஆண்டில் வானில் கார்கள், சாலை முழுக்க ரோபோக்களைக் கண்டதாக கூறுவது பற்றி..

News image

சாலை முழுக்க ரோபோக்கள் - Center-Center-Kochi

Updated On :11 ஆகஸ்ட் 2026, 3:44 pm IST

டைம் டிராவலிங் செய்து 4413ஆம் ஆண்டை பார்த்துவிட்டு திரும்பியவர் என்று தன்னைத்தானே கூறிக் கொள்ளும் ஒருவரின் நேர்காணல்தான், சமூக வலைத்தளங்களில் இன்று வைரலாகி வருகிறது.

கி.பி. 4413-ஆம் ஆண்டுக்குச் சென்று பார்த்து வந்தவர் என்று, தன்னைத்தானே டைம் டிராவல் செய்து வந்தவர் என்று கூறிக்கொள்ளும் ஒருவரின் விசித்திரமான நேர்காணல், தற்போது செயற்கை நுண்ணறிவு உலகையே ஆட்டிப்படைக்கப் போகிறதோ என்ற அச்சத்தில் இருக்கும் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு திகிலூட்டும் எச்சரிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த லூயிஸ் வாக்கர் என்பவர், தனது அசாதாரணமான கூற்றுகளை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த விடியோ பரபரப்பாக வைரலாகி வருகிறது. அது மட்டுமல்ல அவர் தன்னுடைய முக அடையாளத்தையும் மறைத்துள்ளார். இதுவே அவருடைய கூற்றுகள் பொய்யாக இருக்குமோ என்று பல சந்தேகங்களை எழுப்புகிறது.

அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், 1977-ஆம் ஆண்டில் பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்தபோது, ​​ஒரு ரகசிய கால இயந்திரம் செயல்படுவதற்கு 50 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது என்று எச்சரிக்கப்பட்ட போதிலும், அதைச் சோதிப்பதற்காக தனக்கு பெரிய தொகை வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

அந்த இயந்திரம் மூலம் விஞ்ஞானிகள் தன்னை 600 ஆண்டுகள் எதிர்காலத்திற்கு அனுப்பத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதற்குப் பதிலாக தான் கி.பி. 4413-ஆம் ஆண்டில் ஒரு ஆள் அரவமற்ற மருத்துவமனையில் கண்விழித்ததாகவும் வாக்கர் கூறுகிறார்.

அப்போது வெளியே வந்து பார்த்த என் தலைக்கு மேலே கார்கள் பறந்து கொண்டிருந்தன; தெருக்கள் முழுவதும் ரோபோக்களாக இருந்தன. மிகச் சில மனிதர்களை மட்டுமே என்னால் காண முடிந்தது, என்று அவர் பார்த்ததாகக் கூறுவதை நினைவுகூர்ந்தார்.

வரும் 2028ஆம் ஆண்டில், டைம் டிராவல் என்பது பொதுமக்களுக்குக் கிடைக்கும் தொழில்நுட்பமாக மாறும் என்றும், அதன் மூலம் ஏராளமானோர் டைம் டிராவல் செய்து பார்க்கும் நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், வாக்கர் கூறிய தகவலில் மிகவும் அதிர்ச்சியூட்டுவது என்னவென்றால், தொழில்நுட்பம் மேம்பட்டு ஒன்றிணைந்த பிறகு மனித இனம் காலப்போக்கில் அழிந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் அதன் விளைவாக ரோபோக்களால் நிறைந்திருக்கும் ஒரு உலக நாகரிகம் எஞ்சியிருக்கலாம் என்றும் கூறுகிறார். (இதை நம்புவதற்கும் இல்லை, நடக்கவே வாய்ப்பில்லை என புறந்தள்ளும் நிலையிலும் இல்லை)

ஆனால், அவர் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டாலும், இதனை உறுதிப்படுத்த ஒரு சிறு ஆதாரம்கூட அவரிடம் இல்லை. டைம் டிராவலிங் செய்யும் இயந்திரங்களை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி செய்திருக்கலாம். ஆனால், அப்படி ஒரு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு சான்றும் இல்லை.

1977-ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் ரகசியமாக டைம் டிராவல் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதில் சோதித்துப் பார்க்க தான் அழைக்கப்பட்டதாகவும் அதற்கு என் குடும்பத்துக்கு மிகப்பெரிய தொகை வழங்கப்பட்டதாகவும் கூறியிருப்பது சந்தேகங்களை எழுப்புகிறது.

2026ஆம் ஆண்டில் இருக்கும் நாம், சுமார் 2200 ஆண்டுகள் கழித்து அதாவது 4413-ஆம் ஆண்டுக்குச் சென்று திரும்பி வந்ததாகக் கூறும் ஒருவர், மனிதகுலம் மகிழ்ச்சி அடையும் எதையும் கூறவில்லை, மோசமான எச்சரிக்கையைத்தான் விடுத்திருக்கிறார். எனவே, இதனை நம்புவதற்கில்லை என்று விட்டுச் செல்வதே இப்போதைய நிம்மதிக்கு நல்லது என்று கூறப்படுகிறது.

Summary

The experience of a time traveler! What—flying cars and roads filled with robots in the year 4413?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.