ஐடிஆர் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காத்திருக்கக் கூடாதாம்! ஏன்?திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!மக்களவையில் பேசத் தடுத்ததை இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்திவந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

அதிகம் விற்பனையாகும் டாப் 10 கார்களின் பட்டியல்!

2026 ஆம் ஆண்டில் முதல் பாதி வரையில் நாட்டில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியல் குறித்து...

News image

கார்கள் - கோப்புப் படம்

Updated On :29 ஜூலை 2026, 6:16 pm IST

2026 ஆம் ஆண்டில் முதல் பாதி வரையில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் அதிகம் விற்பனையாவதாகவும், இதற்கு அடுத்த இடத்தில் டாடா நிறுவனமும் உள்ளது.

2026 ஆம் ஆண்டில் முதல் பாதியில், அதாவது ஜூன் மாதம் வரையில் மாருதி சுசூகியின் டிசைர் கார் அதிகம் விற்பனையாகியுள்ளது. அரை ஆண்டில் மட்டும் 1,26,204 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட31% அதிகமாகும்.

டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் 2வது இடம் பிடித்துள்ளது. அரை ஆண்டில் மட்டும் 1,19,303 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 84,579 கார்கள் விற்பனையாகின. இது கடந்த ஆண்டை விட 41% அதிகமாகும்.

3வது இடத்தில் டாடாவின் நிக்சான் உள்ளது. இந்த ஆண்டின் ஜூன் வரையிலான காலகட்டத்தில், 87,267 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 35% அதிகமாகும்.

4வது இடத்தில் மாருதி சுசூகியின் எர்டிகா கார் உள்ளது. அரை ஆண்டில் மட்டும் 1,08,295 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 91,991 கார்கள் மட்டுமே விற்பனையாகின. அதாவது இந்த அரை ஆண்டில் 18% விற்பனை அதிகரித்துள்ளது.

5வது இடத்தில் மாருதி சுசூகியின் வேகன் ஆர் உள்ளது. இந்த ஆண்டில் 1,00,704 கார்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால், இந்த ஆண்டை விட கடந்த அரை ஆண்டில் அதிகமான (1,01,424) கார்கள் விற்பனையாகி இருந்தன. இந்த அரை ஆண்டில் 1% விற்பனை சரிந்துள்ளது.

6வது இடத்தில் மாருதி சுசூகியின் ஷிஃப்ட் கார் உள்ளது. 2026 அரை ஆண்டில் 97,747 கார்கள் வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்டுள்ளது. கடந்த முறை 93,098 கார்கள் விற்பனையானதால், 5% விற்பனை அதிகரித்துள்ளது.

7வது இடத்தில் மாருதி சுசூகியின் பலேனோ கார் அதிகம் வாங்கப்படும் காராக உள்ளது. இந்த அரை ஆண்டில் மட்டும் 96,996 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 81,566 கார்கள் விற்பனையாகி இருந்தன. அதாவது இந்த ஆண்டில் 19% அதிகம் விற்பனையாகியுள்ளது.

8வது இடத்தில் மீண்டும் மாருதி சுசூகியே உள்ளது. இந்நிறுவனத்தின் ஃரான்க்ஸ் கார் இந்த ஆண்டில் 8% அதிகம் விற்பனையாகியுள்ளது. இந்த அரை ஆண்டில் 95,441 கார்கள் விற்பனையாகியுள்ளன.

9வது இடத்தில் ஹுண்டாய் நிறுவனத்தின் க்ரேடா கார் உள்ளது. இந்த அரை ஆண்டில் 91,391 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 1,00,560 கார்கள் விற்பனையாகியிருந்தன. அதனால் ஹுண்டாய் விற்பனை 9% சரிந்துள்ளது.

10வது இடத்தில் மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ உள்ளது. 2026 ஜூன் வரையிலான அரை ஆண்டில் 89,375 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 85,648 கார்கள் விற்பனையாகியிருந்தன. இந்த ஆண்டு 4% அதிக விற்பனையைக் கண்டுள்ளது மஹிந்திரா.

அதிகம் விற்பனையான கார்களின் டாப் 10 பட்டியலில் மாருதி சுசூகி நிறுவனத்தின் 6 தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

Summary

List of the top 10 best-selling cars!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.