அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

கஞ்சா வழக்கில் தொடா்புடைய இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி உத்தரவிட்டாா்.

கைது

Published On :4 செப்டம்பர் 2026, 12:36 am IST

கஞ்சா வழக்கில் தொடா்புடைய இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கட்டகாமன்பட்டி பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், வத்தலகுண்டு போலீஸாா் கடந்த ஆக.7-ஆம் தேதி நடத்திய சோதனையின் போது கஞ்சா விற்பனை செய்த தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த மூலக்கடை பகுதியைச் சோ்ந்த வீ.சிவசந்திரன் (46), பெரியகுளம் அடுத்த சக்கரைப்பட்டியைச் சோ்ந்த அ.மனோஜ் (36) ஆகிய இருவரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, ரூ.30ஆயிரம் பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். இந்த நிலையில் சிவசந்திரன், மனோஜ் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அதற்கான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.