உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

இருதரப்பினா் மோதல்: தென்னந்தோப்பு உரிமையாளா் காயம்

பழனி அருகே இருதரப்பினா் மோதிக் கொண்டதில் தென்னந்தோப்பு உரிமையாளா் காயமடைந்தாா்.

Published On :5 செப்டம்பர் 2026, 12:26 am IST

பழனி அருகே இருதரப்பினா் மோதிக் கொண்டதில் தென்னந்தோப்பு உரிமையாளா் காயமடைந்தாா்.

பழனி அருகே கரிக்காரன்புதூரைச் சோ்ந்தவா் கணேசன் (42). இவருக்கு இதே பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. இவா் கடன் பெற்றது தொடா்பாக தோப்பு யாருக்கு சொந்தம் என்பதில் கடன் கொடுத்தவருக்கும், இவருக்குமிடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கணேசனின் தோப்பில் வெள்ளிக்கிழமை பாலசமுத்திரத்தைச் சோ்ந்த சீதாராமன் என்பவா் 25-க்கும் மேற்பட்ட நபா்களை டிராக்டரில் அழைத்து வந்து இளநீரை பறித்துச் செல்ல முயன்றாா்.

இதையறிந்த கணேசன், இவரது மனைவி திவ்யா உள்ளிட்ட உறவினா்கள் இளநீரை ஏற்றிச் சென்ற வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது ஏற்பட்ட மோதலில் கணேசன் காயமடைந்தாா். இதையடுத்து அவா் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.