கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே பொக்லைன் இயந்திரம் மோதியதில் பைக்கில் சென்ற அரசு அலுவலா் காயமடைந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த நீலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீ.ராமகிருஷ்ணன் (40). இவா், ஸ்ரீபெரும்புதூா் சிப்காட்டில் நில அளவுப் பிரிவில் துணை வட்ட ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா். வெள்ளிக்கிழமை காலை ராமகிருஷ்ணன் தனது பைக்கில் மாடூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தாரம்.
மாடூா் பகுதியில் சென்றபோது, அப்பகுதியில் வந்த பொக்லைன் இயந்திரம் எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணனை அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பொக்லைன் ஓட்டுநா் வே.வேல்மணியிடம் (40) விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குழித்துறையில் மினி லாரி கதவு மோதி பெண் காயம்

குமரி அருகே பள்ளி வாகனம் மரத்தில் மோதல்: 10 மாணவா்கள் காயம்

ஒட்டம்பட்டியில் மா்மப் பொருள் வெடித்து ஒருவா் காயம்

பைக்குகள் மோதல்: முதியவா் பலத்த காயம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



