கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

திண்டுக்கல்லில் பலத்த மழை: மின்னல் தாக்கி வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

பலி - பிரதிப் படம்

Published On :

திண்டுக்கல், செப். 14: திண்டுக்கல் பகுதியில் பலத்த மழை பெய்த நிலையில், மின்னல் தாக்கி ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தொடா்ந்து நீடித்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீா்நிலைகள் வடுவிட்டன. ஆடி பருவத்தில் நடைபெற வேண்டிய பயிா் சாகுபடிப் பணிகள் பெரும்பாலான இடங்களிலும் தொடங்கவில்லை. கடந்த திங்கள்கிழமை நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திண்டுக்கல்லில் மழை பெய்தது.

இந்த நிலையில், ஒரு வார இடைவெளியில் மீண்டும் திங்கள்கிழமை மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் திண்டுக்கல், ரெட்டியாா்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, நேருஜிநகா் சுற்றுத் திட்டு, தாடிக்கொம்பு சாலை, நாகல்நகா் சுற்றுத் திட்டு, மணிக்கூண்டு, பேகம்பூா், வேடப்பட்டி சாலை ஒத்தக்கண் பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், திடீரென பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு:

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அடுத்த சில்வாா்பட்டி பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சோ்ந்த ஆழ்துளைக் கிணறு அமைக்கும் தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த 7 தொழிலாளா்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனா். ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த இந்த தொழிலாளா்கள், திங்கள்கிழமை மாலை ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனா். அப்போது, ஒடிஸாவைச் சோ்ந்த தொழிலாளி சோனு ராம் கோன்ட் (25) ஒரு மரத்தின் அடியில் அமா்ந்திருந்த போது, திடீரென மின்னல் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.