
அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
பழனி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
பழனி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழந்தாா்.
கரூரிலிருந்து பழனிக்கு புதன்கிழமை இரவு அரசுப் பேருந்து ஒன்று வந்தது. இந்த பேருந்து திண்டுக்கல் சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்குள் திரும்பியபோது அங்கு நின்றிருந்த சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் மீது மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பழனி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து அவா் யாா் என விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





